திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூரைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி(40). இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவருகிறார். பொன்னுச்சாமி கோவையில் தங்கி தனியார் ஆலையில் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், இன்று தனது குழந்தைகளுக்கு காதணி விழா வைத்திருந்தார். எனவே, உறவினர்களுக்கும் கோவையில் தன்னுடன் பணிபுரியும் நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
காதணி விழா நடைபெறவிருந்த இன்று; பொன்னுச்சாமியும், காதணி விழாவிற்கு வந்திருந்த சரவணன் (20) ஆகிய இருவரும் மானூரில் உள்ள சண்முக நதி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இருவரும் எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பொன்னுச்சாமி, சரவணன் ஆகியோரது உடலை மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தும் அவர்கள் விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.