ETV Bharat / state

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் சின்னவெங்காயம், முருங்கைக்காய் விலை கடும் உயர்வு! - dindigul ottansam

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் சின்னவெங்காயம், பல்லாரி வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

dindigul-ottansam
author img

By

Published : Nov 5, 2019, 11:32 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மார்க்கெட் ஆகும். இந்த மார்க்கெட்டிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். அவ்வாறு கொண்டு வரப்படும் காய்கறிகள் அதிகமாக கேரள மாநிலத்துக்கு விற்பனைக்குச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் தற்போது சின்ன வெங்காயம், பல்லாரி வெங்காயம், முருங்கைக்காய் உற்பத்தி இல்லாத சீசன் என்பதாலும், அதிகப்படியான வரத்து இல்லாத காரணத்தாலும் அவற்றின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது.

குறிப்பாக இரண்டு தினங்களில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதே போல் பல்லாரி வெங்காயத்திற்குத் தட்டுபாடு ஏற்பட்டு, போதிய பல்லாரி வெங்காயம் வரத்து இல்லாத காரணத்தால், ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், தற்போது ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் இன்னும் விலை ஏறி ரூபாய் 55 முதல் 60க்கு விற்பனையாகிறது.

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை

ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.200க்கு விற்பனையானது. இதனால் கேரள வியாபாரிகளுக்குத் தேவையான அளவு முருங்கைக்காய் விற்பனைக்குத் தர முடியவில்லை என ஒட்டன்சத்திரம் கமிஷன் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்த விலை உயர்வால் முருங்கைக்காய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:

ஒரே நாளில் 3 இடங்களில் நடைபெறவிருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!

Intro:திண்டுக்கல். 05.11.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ 200 க்கு விற்பனை

Body:திண்டுக்கல். 05.11.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ 200 க்கு விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் பிரசித்தி பெற்றதாகும் இந்த மார்க்கெட்டிற்கு ஒட்டன்சத்திரம் சுற்றுப்புற பகுதி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் இங்கு கொண்டு வரப்பட்டு விற்பனையாகி தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் கேரள மாநிலத்திற்கும் ஏற்றுமதி ஆவது வழக்கம் இதனால் தினந்தோறும் 5 முதல் 6 கோடி வர்த்தகம் நடைபெறும் இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையாலும் தற்போது முருங்கக்காய் விளைச்சல் சீசன் இல்லாததாலும் அவற்றின் வரவு கடந்த ஒரு மாத காலமாக குறைந்து வந்தது இந்நிலையில் மார்க்கெட்டிற்கு ஒட்டன்சத்திரம் சுற்றுப்புற பகுதி மற்றும் உடன்குடி தேனி சின்னமனூர் ஆகிய பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் வரவு வந்துகொண்டிருந்தது அவற்றின் வரவும் மிகவும் குறைந்து போனதால் இன்று ஒரு கிலோ முருங்கைக்காய் கிலோ 200 க்கு விற்பனையானது இருந்தபோதிலும் கேரள வியாபாரிகளுக்கு தேவையான அளவு முருங்கைக்காய் விற்பனைக்கு தர முடியவில்லை என ஒட்டன்சத்திரம் கமிஷன் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர் இந்த விலை உயர்வால் முருங்கக்காய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

பேட்டி :தங்கராஜ் வியாபாரிConclusion:திண்டுக்கல். 05.11.19
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ 200 க்கு விற்பனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.