திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, ரெட்டியார்சத்திரம் ஆகிய பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும் மதுரை மற்றும் பல மாவட்டங்களில் திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஒட்டன்சத்திரம் அடுத்த செம்மடைப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரனை ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சந்திரசேகரன் ஒட்டன்சத்திரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தைத் திருட வந்தபோது தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சியில் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவியிடம் 21 சவரன் நகையையும் சேலத்தில் தங்கியிருந்த வீட்டில் வைத்திருந்த 90 சவரன் நகையையும் இருசக்கர வாகனத்தையும் காவல்துறையினர் மீட்டனர். மேலும் சந்திரசேகரன், பறிமுதல் செய்யப்பட்ட 111 சவரன் நகை மற்றும் இரு சக்கர வாகனத்தை ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
பல கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட சந்திரசேகரனை மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: உள்ளாட்சி உங்களாட்சி 7 - கிராம வளர்ச்சித் திட்டங்கள்