திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததாகும். இந்த பழமை வாய்ந்த கோயிலின் மகா கும்பாபிஷேக விழா 29ஆம் தேதியன்று காலையில் யாகசாலை அமைக்கப்பட்டு காலை பூஜையுடன் தொடங்கியது. பின்னர் 31ஆம் தேதி இரண்டாம் கால யாக பூஜையும் நடந்தது. 1ஆம் தேதி மூன்றாம் கால பூஜை நடந்தது.
இந்நிலையில், காசி, ராமேஷ்வரம், கங்கை, அழகர்கோயில் ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தக்குடங்களை மேளதாளம் முழங்க கோயிலின் உச்சியில் உள்ள கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கருடன் வட்டமிட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குலவையிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.