ETV Bharat / state

வறுமையின் அடையாளம் கண்ணீர் - தன்மானத்தை இழக்காத தொழிலாளி - திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே கொளுத்தும் வெயிலில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் உழைப்பின் அடையாளமாக திகழ்ந்து வருகின்றனர்.

கல் உடைக்கும் தொழிலாளர்கள்
author img

By

Published : May 1, 2019, 9:35 PM IST

Updated : May 1, 2019, 11:20 PM IST

வரலாறுகள் உருவாகவும் அதை உருமாற்ற காரணமான தொழிலாளர்கள் தங்களின் உரிமையை நிலைநிறுத்தும் வகையில் உருவானது தான் தொழிலாளர் தினம். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் இயந்திர மயமாக்குதலாலும் பல தொழில்கள் நலிவடைந்து போனது. நெசவு மற்றும் சிறு தொழில்களை நம்பி மிகப்பெரிய பின்புலம் இல்லாத சிறு சிறு குழுக்களாக உடல் உழைப்பினை நம்பி இயங்கும் தொழிலாளர்கள் வாழ்வில் தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் சறுக்கலை ஏற்படுத்தி உள்ளது.

கல் உடைக்கும் தொழிலாளர்கள்

இது போன்றதொரு சூழலில்தான் திண்டுக்கல் மாவட்டம் கள்ளிப்பட்டி மலையில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த கள்ளிப்பட்டி. கிராமம் வறண்ட பூமி என்பதால் இங்குள்ள மக்கள் பெரும்பாலும் கல் உடைப்பது மற்றும் ஆடு வளர்ப்பு போன்ற பணிகளை தான் நம்பி உள்ளனர். கள்ளிப்பட்டியை சுற்றி 5க்கும் மேற்பட்ட மலைகளில் கல் உடைக்கும் பணி நடைபெறுகிறது. தற்போது இயந்திரங்களால் உடைக்கப்படும் ஜல்லி கற்களையே அதிகமாக கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதால், கைகளால் கல் உடைக்கும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அன்றாட வாழ்விற்கு அல்லல்படும் நிலை இருந்தாலும் தங்கள் உழைப்பை ஒருபோதும் கைவிடாமல் கொளுத்தும் வெயிலிலும் பாறைகளை உடைத்து கற்கள் எடுத்து வேலை செய்து வருகின்றனர். இதில், ஒரு வாரத்திற்கு 1000 ரூபாய் கிடைப்பதே அரிதாக உள்ளது. இருப்பினும் வருமானம் இல்லை என்பதால் வீட்டில் இருக்க முடியாது இல்லையா என்று ஒரு தொழிலாளர் கூறியது மனதில் ஆணி அடித்து உறைந்து போன வார்த்தையாக இருக்கிறது.

Intro:திண்டுக்கல் பிரியங்கா

1.5.19

"உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே" என்ற எம்ஜிஆரின் பழைய பாடல் இன்றளவும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. உலக வரலாற்றில் பல புரட்சிகளை உருவாக்கியது தொழிலாளர்கள் வர்க்கமே. வரலாறுகள் உருவாகவும் அதே வரலாறுகள் உருமாறவும் காரணமான தொழிலாளர்கள் தங்களின் உரிமையை நிலைநிறுத்தும் வகையில் உருவான தொழிலாளர் தினம்.

Body:தொழில்நுட்ப வளர்ச்சியாலும் இயந்திர மயமாக்குதலாலும் பல தொழில்கள் நலிவடைந்துள்ளது. அதில் முக்கியமானவை நெசவு மற்றும் சிறு தொழில்கள். பெரிய பின்புலம் இல்லாத சிறு சிறு குழுக்களாக உடல் உழைப்பினை நம்பி இயங்கும் தொழிலாளர்கள் வாழ்வில் தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் சறுக்கலை ஏற்படுத்தி உள்ளது.

தங்கள் அன்றாட வாழ்வை கடத்துவதற்கு வழியில்லாமல் மாற்று வேலை தெரியாது என்பதால் இன்றளவும் ஒரே வேலையை நம்பி வாழ்க்கையை நடத்தும் தொழிலாளர்கள் ஏராளம். இது போன்றதொரு சூழலில்தான் திண்டுக்கல் மாவட்டம் கள்ளிப்பட்டி மலையில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அமைந்துள்ள கிராமம் கள்ளிப்பட்டி. இந்த கிராமம் வறண்ட பூமி என்பதால் இங்குள்ள மக்கள் பெரும்பாலும் கல் உடைப்பது மற்றும் ஆடு வளர்ப்பு போன்ற பணிகளை தான் நம்பி உள்ளனர். கள்ளிப்பட்டி சுற்றி 5க்கும் மேற்பட்ட மலைகளில் கல் உடைக்கும் பணி நடைபெறுகிறது. இதனை நம்பியே அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் உள்ளனர். இங்குள்ள மலைகளில் பாறைகளை உடைத்து கிடைக்கும் கற்களை கட்டுமான பணிகளுக்கு விற்பனை செய்கின்றனர். ஆனால் தற்போது கிரஷர் என்று கூறப்படும் இயந்திரங்களால் உடைக்கப்படும் ஜல்லி கற்களையே அதிகமாக கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் கைகளால் கல் உடைக்கும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கொளுத்தும் வெயிலிலும் பாறைகளை உடைத்து கற்கள் எடுத்தாலும் அதனை வாங்குவதற்கு ஆள் இல்லாமல் குவியலாக ஓர் ஓரத்தில் குவிந்து கிடக்கிறது.

அன்றாட வாழ்விற்கு அல்லல்படும் நிலை இருந்தாலும் தங்கள் உழைப்பை ஒருபோதும் கைவிடாமல் இயங்கி வரும் தொழிலாளர் கணேசன் நம்மிடையே பேசுகையில், "கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கல் உடைக்கும் பணி செய்து வருகிறேன். இதற்கு முன்னர் வேறு ஒரு இடத்தில் பணி செய்தேன். தற்போது இந்த இடத்தில் பத்து வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். ஆனால் முன்பு போல தற்போது ஜல்லி கற்கள் விற்பனை ஆவதில்லை. இதற்கு முக்கிய காரணம் கிரஷர் என்று கூறப்படும் எந்திரத்தினால் உடைக்கப்படும் கற்களையே கட்டுமான பணிகளுக்கு அதிகம் வாங்கி வருகின்றனர். இதனால் மக்களிடையே கைகளால் உடைக்கப்படும் கற்களை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை.

மேலும், முன்பெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு லோடு கல் உடைப்போம். ஆனால் இந்த கோடை காலத்தில் இரண்டு நாளைக்கு ஒரு லோடு கல் உடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது. இருப்பினும் இந்த வெயிலிலும் கூட தொடர்ந்து வேலை செய்து வருகிறோம். ஒரு வாரத்திற்கு 1000 ரூபாய் கிடைப்பதே அரிதாக உள்ளது. இருப்பினும் வருமானம் இல்லை என்பதால் வீட்டில் இருக்க முடியாது இல்லையா" என்கிறார்.

Conclusion:
Last Updated : May 1, 2019, 11:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.