வடமதுரை நிலப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். கூலித்தொழிலாளியான இவரது மனைவி திவ்யபாரதி ஆவார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆயிற்று. இந்தத் தம்பதியினருக்கு சுதீஸ்(5), சுவேதா (3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் திவ்யபாரதி இன்று காலை அதே பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் தலை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார்.
அப்பகுதி பொதுக்கள் திவ்யபாரதி வெட்டு காயங்களுடன் சடலமாகக் கிடப்பதை அறிந்து காவல் துறைக்குத் தகவல் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்க: உயிரிழந்த வில்சனுக்காக காவல் ஆளினர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!