திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கான தேர்தல் இன்று ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது. தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியினர் 10 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். அதிமுக ஆறு இடங்களிலும், சுயேட்சை மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் தேர்தலில் தங்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வராததால், அவர்கள் காணாமல் போய்விட்டதாக தேர்தல் அலுவலர்களிடம் கூறியுள்ளார். மேலும் அந்த உறுப்பினர்கள் வந்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த திமுகவினர் ஜெயசீலனை வெளியேற்றுமாறு காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி உள்ளிட்டோர் முறையாக தேர்தலை நடத்துமாறு மாவட்ட துணைக் கண்காணிப்பாளரிடம் கோரிக்கைவைத்தனர்.