தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், சென்னை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு அடைப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முழு ஊரடங்கு நாளான இன்று (ஜூலை 5) திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தடுக்கும் வகையில் காவல் துறையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணிகளை டிஐஜி முத்துச்சாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிருமிநாசினி, கையுறையின்றி பணியிலிருந்த வேடசந்தூர் பகுதி காவல் துறையினரை கண்டித்தார். பணியில் இருக்கும்போது கண்டிப்பாக கிருமிநாசினி, கையுறை ஆகியவற்றை உடன் வைத்திருக்க வேண்டும் என அவர் காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:கரோனா பரவலிருந்து தப்பிக்க புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அமைப்புகள்