ETV Bharat / state

வீரமுஷ்டி நடனம், தலையில் தேங்காய் உடைப்பு - திண்டுக்கல் அருகே விநோத வழிபாடு! - devotees broke the coconut on the head in sri mahalaxmi temple nagampatti

திண்டுக்கல்: நாகம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீமஹாலட்சுமி கோயிலில் சரஸ்வதி பூஜை நாளையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு செய்தனர்.

தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு!
author img

By

Published : Oct 7, 2019, 11:56 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில் அமைந்துள்ளது ஸ்ரீமஹாலட்சுமி திருக்கோயில். இக்கோயிலில் வருடந்தோறும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை திருநாளையொட்டி உற்சவ நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

வீரமுஷ்டி நடனத்தோடு ஆயுத பூஜை கொண்டாடிய பக்தர்கள்

குறும்பர் இன மக்கள் மட்டும் பங்குபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இன்று நடைபெற்ற இத்திருவிழாவிலும் அவர்களின் பாரம்பரிய நடனமான வீரமுஷ்டி நடனமாடியும் கையில் தீ பந்தம் ஏந்தியும் பக்தர்களை சுற்றி வந்தனர்.

பின்னர் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியைக் காண சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் பெற்றனர்.

இதையும் படியுங்க:

தலையில் நெருப்புடன் ஆடிய சிறுமிகள்- இது நவராத்திரி கொண்டாட்டம்!

Intro:திண்டுக்கல் 7.10.19

சரஸ்வதி பூஜை திருநாளையொட்டி தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு.

Body:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில் உள்ள ஸ்ரீமஹாலட்சுமி திருக்கோவிலில் வருடத்தோரும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை திருநாளையொட்டி உற்சவ நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இதில் குரும்பர் இன மக்கள் மட்டும் வழிபடுவர்கள். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தலையில் தேங்காய் உடைத்து வழிபடுவது மிகவும் பிரபலம்.

இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் வீரமுஷ்டி நடனமாடி தீ பந்தம் ஏந்தியபடி பக்தர்களை சுற்றிவந்து வேண்டுதல் வைத்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியை கான சுற்று பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்கள்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.