திண்டுக்கல்: கொடைக்கானலில் தொடரும் மழையால் சுற்றுலாப்பயணிகளின் மனம் கவர்ந்த இடமான ரோஜா பூங்காவிலிருந்த 1000-க்கும் அதிகமான ரோஜா செடிகளில் ரோஜாப்பூக்கள் அழுகின.
தோட்டக்கலைத்துறையின் பராமரிப்பில் உள்ள இப்பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற பல வண்ணங்களினால் ஆன பல லட்சம் மலர்கள் பூத்துக்குலுங்கி வருகின்றன. ஆனால், தற்போது அங்கு பெய்து வரும் மழையிலிருந்து அவற்றைப் பராமரிக்க இயலாத நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து செல்கின்றனர்.
எனவே, தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறையினர் இணைந்து மழையில் அழுகும் ரோஜா செடிகளைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை சுற்றுச்சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: இயற்கை விவசாயத்தில் அசத்தும் எம்பிஏ பட்டதாரி