ETV Bharat / state

ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் இரண்டு கோள்கள் - டிச.21இல் வானில் தெரியும் அரிய நிகழ்வு - Jupiter planet

திண்டுக்கல்: வானில் வியாழன், சனி கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்தித்துகொள்ளும் அரிய நிகழ்வானது டிசம்பர் 21ஆம் தேதி நடக்கிறது. இதனை பொதுமக்கள் காண்பதற்காக கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல்
திண்டுக்கல்
author img

By

Published : Dec 19, 2020, 9:41 PM IST

சனி மற்றும் வியாழன் கோள்கள் டிசம்பர் 21ஆம் தேதியன்று ஒரே நேர்க்கோட்டில் சந்தித்து நட்சத்திரம் போன்ற பிரகாசமான தோற்றத்தை ஏற்படுத்த உள்ளன. இதுகுறித்து கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டாக்டர் எபினேசர் கூறுகையில், இந்த அரிய நிகழ்வினை உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம்.

கோ ஜங்சன் என கூறப்படும் இந்த நிகழ்வு இதற்கு முன்பாக 1623ஆம் ஆண்டுதான் நடைபெற்றது. ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21ஆம் தேதி இது நடக்கிறது.

வியாழன், சனி கோள்கள் சந்தித்துகொள்ளும் போது நட்சத்திரத்தைப் போன்று தான் காட்சி தரும் கொஞ்சம் கூடுதலான வெளிச்சத்துடன் இந்த கோள்கள் கண்ணுக்கு தெரியும். பூமியிலிருந்து வியாழன் கோள் 884 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சனிகோள் 1613 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வளவு தொலைவில் உள்ள கோள்கள் நேர்கோட்டில் வருவது ஒரு அதிசய நிகழ்வாகும்.

டாக்டர் எபினேசர், விஞ்ஞானி

பொதுமக்கள் இதனை காண்பதற்கு வசதியாக கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மாலை 6 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 20 ரூபாய் முதல் 50 ரூபாய்வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்து இதுபோன்ற ஒரு நிகழ்வு 2418ஆம் ஆண்டுதான் நடக்கும்” என்றார்.

இதையும் படிங்க: சாதிக்கத் துடிக்கும் உணர்வு - இளம் விஞ்ஞானி வினிஷாவின் கண்டுபிடிப்புகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.