திண்டுக்கல்: மாவட்டம் கொடைக்கானலில் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான தூண்பாறை, குணா குகை உள்ளிட்ட இடங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம்.
தற்போது கொடைக்கானலில் கனமழை பெய்து வரும் நிலையில் அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீரானது பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணி அருண்குமார் (24) என்பவர் ஓராவி அருவியில் குளிக்கச் சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்தார்.
இளைஞர் உயிரிழப்பு
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொடைக்கானலில் அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிக்குள் சென்று வருவது தொடர்கிறது. இதனை காவல்துறை மற்றும் வனத்துறை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்