திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட கிராமியக் கலைஞர்கள் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மார்ச் முதல் மே மாதம் வரை, கோடைக்காலம் என்பதால், கோயில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறுவது வழக்கம். ஊரடங்கு உத்தரவால், கடந்த மூன்று மாதமாக, விழாக்கள் எதுவும் நடைபெறாததால் கிராமியக் கலைஞர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி கலியுக சிதம்பரேஸ்வரர் ஆலயம் முன்பு நின்று தொடர் இசை முழங்கி தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.
இது குறித்துப் பேசிய அக்கலைஞர்கள், "கடந்த மூன்று மாதங்களாக கோயில் திருவிழாக்கள், விசேஷங்கள் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம். எங்களுக்கு வேறு தொழில் தெரியாது என்பதால் வேறு வேலைக்கும் செல்ல முடியவில்லை.
அதனால் பட்டினியாகவே நாள்களைக் கழித்துவருகிறோம். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தப் பலனும் இல்லை. ஆதலால், எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ’குடிமராமத்துப் பணிகளில் அரசியல் தலையீடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’