திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சாலையில் உள்ள காப்பிளியபட்டி, கள்ளிப்பட்டி, ஆழக்குவார்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நிரந்தர குடியிருப்பு இல்லாமல் அரசு புறம்போக்கு நிலங்களில் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து வசித்துவருகின்றனர்.
இவர்கள், குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கைவிடுத்தனர். ஆனால் அதற்கு மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 13) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குழந்தைகளுடன் திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.