திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் அதிகம் வெளியே வருவதில்லை. இந்நிலையில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணிப் பாதுகாக்க தினமும் தூய்மைப் பணியாளர்கள், மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களிலும் தங்களது தூய்மைப் பணியில் துரிதமாகச் செயல்பட்டுவருகின்றனர்.
அந்தவகையில் திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் தினசரி சேரக்கூடிய குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்கள் அப்புறப்படுத்திவருகின்றனர். மேலும் சாக்கடை அடைப்புகளை அதிகளவில் மக்கள் கூடும் பகுதிகளில் இருந்தது. அந்த இடங்களில் பணி செய்யமுடியாத நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் அடைப்புகள் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் சாலைகள், தெருக்கள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கும் பணியை முழுவீச்சில் செய்துவருகின்றனர். உயிர்காக்கும் மருத்துவர்கள் ஒருபுறம் அர்ப்பணிப்போடு பணி செய்துவரும் நிலையில் மற்றொருபுறம் நகர்ப்பகுதியில் தூய்மையைக் கருதி வைரஸ் கிருமிகள் பரவாமல் தடுக்க தூய்மைப் பணியாளர்கள் தன்னலம் பாராது உழைத்துவருகின்றனர்.
இதையும் படிங்க: பொருள்கள் விலை உயர்த்தி விற்பனைசெய்தால் கடும் நடவடிக்கை - திருப்பூர் ஆட்சியர்