திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு தேர்வு நிலை பேரூராட்சியில் கரோனா வைரஸை தடுப்பதற்காக பேரூராட்சி பகுதிகளில் வீடு வீடாக சென்று தூய்மைப்படுத்தும் சிறப்பு சுகாதார பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களின் சுகாதாரத்தை பரிசோதிக்கும் விதமாக, ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வத்தலகுண்டு சமுதாயக் கூடத்தில் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர்.