உலகையே அச்சுறுத்திவரும் கோவிட்-19 (கொரோனா) வைரஸ் சீனாவிலிருந்து தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்தியாவில் இந்த வகை வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அரசு கலைக் கல்லூரி பொது சேவை துறையைச் சேர்ந்த மாணவிகள் கொரோனா வைரஸ் குறித்து பிரையண்ட் பூங்கா பகுதி அருகே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். அதில், கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்தும், அதனைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களைக் கவரும் விதமாக சினிமா பாடல்கள் மூலமாகவும், வசனங்கள் மூலமாகவும் நடனங்கள் ஆடியும், நாடகங்கள் நடித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை' - மக்கள் நல்வாழ்வுத்துறை