தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு அதிகளவில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட 7ஆவது வார்டு வினோபா நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று வந்தது கண்டறியப்பட்டு, அவரின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பின் சோதனையின் முடிவில் அந்த நபருக்கு கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து,
இதனையடுத்து அவர் வசித்து வரும் வினோபா நகர் பகுதி காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தடுப்புகள் அமைத்து தடை செய்யப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியில் செல்லாதவாறு காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதி முழுவதும் நகராட்சி ஊழியர்கள் மூலம் கிருமி நாசினியை தெளித்தனர். அதனைத்தொடர்ந்து கரோனா பாதித்த நபரிடம் தொடர்பில் இருந்த உறவினர், நண்பர்களிடம் கரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: செருப்பு தைக்காமல் நாள்களை கடத்தலாம்...பசி இல்லாமல் வாழ்வை நகர்த்த முடியாது!