கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 24ஆம் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், "கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லாமல் வீட்டிலிருந்து ஒத்துழைக்க வேண்டும்.
மக்களின் அத்தியாவசிய பொருள்களான பால், தண்ணீர், காய்கறி உள்ளிட்ட பொருள்கள் தங்கு தடையின்றி அனைவருக்கும் கிடைக்கும். ஆதலால் மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மக்கள் தங்கள் நலனில் அக்கறை கொண்டு ஊரடங்கு உத்தரவை உறுதியுடன் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவுதலை தடுக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: முதலமைச்சர் பழனிசாமி இன்றிரவு 7 மணிக்கு உரை!