திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் துணை காவல் ஆய்வாளருக்கு நேற்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்ட துணை காவல் ஆய்வாளர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு காவல் நிலையம் மூடப்பட்டது.
இந்நிலையில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துணை ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருப்பது, அவருடன் பணியாற்றி வந்த சக காவலர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.