தமிழ்நாடு அரசு, சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் முடித்திருத்தும் கடைகளை சில கட்டுப்பாட்டு விதிகளுடன் திறப்பதற்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் திறக்கப்பட்ட கடைகளில், கரோனா தொற்று பரவாமல் இருக்க, கிருமி நாசினி கொண்டுப் பொருள்களை சுத்தம் செய்தும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றவும் செய்கின்றனர்.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் முடித்திருத்தம் செய்யும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரு முடித்திருத்தம் செய்யும் கடையின் அறிவிப்பு பதாகை, மக்களைப் பெரிதும் கவர்ந்தது.
அதில், 'அரசு பாதுகாப்பு நெறிமுறைப்படி முடித்திருத்தம் செய்ய வருபவர்கள் துண்டு, சீப்புக் கொண்டு வரவேண்டும் எனவும்; முகக்கவசம் அணிந்து தான் கடைக்கு வர வேண்டும் எனவும்; தகுந்த இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்' எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: மூட நம்பிக்கையின் உச்சம்: ஜோதிடரின் பேச்சை கேட்டு கர்ப்பிணியை உதைத்த கணவர்...! கலைந்தது கரு...!