ETV Bharat / state

Palani Thaipusam:பழனி தைப்பூசம் திருவிழாவிற்கு கோவை, திண்டுக்கல் சிறப்பு ரயில் இயக்கம்

Special Train:Palani Temple Thaipusam: பழனி கோயில் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு கோயம்புத்தூர் - திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் ஒன்றை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

Special Train:பழனி தைப்பூசம் திருவிழாவிற்கு கோவை,திண்டுக்கல் சிறப்பு ரயில் இயக்கம்

author img

By

Published : Jan 27, 2023, 6:12 PM IST

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத் திருவிழாவை(Palani Temple Thaipusam) முன்னிட்டு பயணிகள் வசதிக்காக கோயம்புத்தூர் - திண்டுக்கல் இடையே ஒரு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, கோயம்புத்தூர் - திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்(Special Train) (06077) ஜனவரி 28, 29, பிப்ரவரி 4, 5, 6ஆகிய நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து காலை 09.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.00 மணிக்கு திண்டுக்கல் வந்து சேரும். மறு மார்க்கத்தில் திண்டுக்கல் - கோயம்புத்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06078) இதே நாட்களில் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 02.00 மணிக்குப் புறப்பட்டு மாலை 05.30 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும்.

இந்த ரயில்கள் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி ரோடு, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.