ETV Bharat / state

Video : 'வந்து கவனித்துவிட்டு செல்' - வசூல் ராஜாவான காவலர், நேர்மையாகப் பதிலளித்த டிரைவர்!

திண்டுக்கல்லில் சோதனைச்சாவடியில் பாதுகாப்புப்பணியில் இருந்த காவலர்களுக்கும், லாரி ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு குறித்த காணொலி வைரலாகப் பரவி வருகிறது.

வாக்குவாதத்தில் ஈடுபடும் காவலர்
வாக்குவாதத்தில் ஈடுபடும் காவலர்
author img

By

Published : Apr 6, 2022, 7:35 PM IST

Updated : Apr 6, 2022, 10:51 PM IST

திண்டுக்கல்: கூம்பூர் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்கள் ஆகியோர் மதியவேளையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியாக வந்த ஏலக்காய் மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரிடம், 'யூனிஃபார்ம் சரியாக அணியவில்லை. வந்து கவனித்துவிட்டு செல்' என காவலர் கூறியுள்ளார்.

இதற்கு வாகன ஓட்டி 'தன்னிடம் அனைத்து வாகனச் சான்றுகளும் சரியாக உள்ளது' எனக் கூறவே ஆத்திரமடைந்த காவலர் ‘ஏய்’ எனக்கூறியவுடன் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் ‘நான் உங்களிடம் ஆடு, மாடு மேய்கிறோமா? அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளன. நீங்கள் வாகனத்தை நிறுத்தச்சொன்னீர்கள். நிறுத்திவிட்டு இறங்கி வந்து பதில் அளிக்கிறோம். அது இது என கேள்வி கேட்கிறீர்கள்’ என தன்னை மரியாதை இன்றி பேசிய காவலரிடம் பொங்கி எழுந்துள்ளார்.

இதனால் கடுப்பான உதவி ஆய்வாளர் ஓட்டுநரிடம் 'ஓவராக சட்டம் பேசுகிறாயா?. உடனடியாக இங்கிருந்து சென்றுவிடு' எனக்கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இவற்றை சரக்கு வாகனத்தில் வந்தவர் வீடியோ எடுப்பதைப்பார்த்து காவலரும் தங்கள் மாட்டிக்கொள்வோம் என பயந்து அவரும் அங்கு நடப்பதை வீடியோ எடுத்துள்ளார்.

வாக்குவாதத்தில் ஈடுபடும் காவலர்

இதற்கு ஓட்டுநர் 'தாராளமாக வீடியோ எடுத்துக் கொள்ளுங்கள்' எனக்கூறி வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சரக்கு வாகன ஓட்டுநர்கள் மற்றும் இணையதளவாசிகள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நேர்மையாகவும், வாகனங்களுக்குத்தேவையான ஆவணங்கள் சரியாக இருந்தால்போதும் யாருக்கும் அடிபணிய வேண்டாம் எனக்கூறி இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம்!

Last Updated : Apr 6, 2022, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.