ETV Bharat / state

காட்டாற்று வெள்ளத்தில் காருடன் சிக்கிய 6 பேரை போலீசார் - காரில் இருந்தவர்கள் பயத்தில் அலறினர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் காட்டாற்று வெள்ளத்தில் காருடன் சிக்கிய 6 பேரை அப்பகுதி கிராம மக்களின் உதவியுடன் போலீசார் பத்திரமாக மீட்டனர்.

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 6 பேரை பத்திரமாக மீட்ட பொதுமக்கள் மற்றும் காவல்துறை

author img

By

Published : Sep 1, 2022, 11:13 AM IST

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே உள்ள வள்ளிபட்டி பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்தை நிறுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வெள்ளோடு பகுதிக்கு பணிக்காக சென்றிருந்த சண்முகம், பாலசுப்ரமணி, பாலகிருஷ்ணன், பாண்டியன், செல்வராஜ், மணிகுமார் ஆகிய ஆறு பேர் ஒரே காரில் திண்டுக்கல் நோக்கி சென்று வந்துகொண்டிருந்தனர். அப்போது வள்ளிபட்டி தரைப்பாலத்தில் ஓடிய காட்டாற்று வெள்ளத்தை பொருட்படுத்தாமல் காரை செலுத்தியுள்ளனர்.

இதனால் கார் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு அங்கிருந்த தடுப்புக்கம்பியில் சிக்கி நின்றது. இருப்பினும் அவர்களால் வெறியேற முடியவில்லை.

காட்டாற்று வெள்ளத்தில் காருடன் சிக்கிய 6 பேரை போலீசார்

அப்போது கூம்புர் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்திரசேகர், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ராஜபாண்டி, வினோத்குமார் மற்றும் ஊர்மக்கள் சேர்ந்து ஒரு டிராக்டரை ஏற்பாடு செய்தனர். அதன் மூலம் கயிறு கட்டி 6 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

இதையும் படிங்க: மீண்டும் காவல் உடையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்...திண்டுக்கல்லில் சர்ச்சை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.