ETV Bharat / state

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: சுற்றுலாப்பயணிகளின் வருகைக் குறைவால் களையிழந்த கொடைக்கானல்! - கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்

திண்டுக்கல்: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்படுவதால் கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் களையிழந்து காணப்படுகிறது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
author img

By

Published : Dec 24, 2020, 10:23 PM IST

சுற்றுலா நகரான கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் விழா களையிழந்து காணப்படுகிறது. இந்நகரில் உள்ள விடுதிகள் மற்றும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக வண்ண, வண்ண ஸ்டார்கள் மிளிர்கின்றன.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கரோனா பொதுமுடக்கத்திற்கு பின்னர் பல்வேறு தளர்வுகளுடன் கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளித்தாலும் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. வழக்கமாக டிசம்பர் இறுதி வாரத்தில் இருந்து ஜனவரி முதல் வாரம் வரை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாடுவதற்காக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள்.

கொண்டாட்டம்
கொண்டாட்டம்

ஆனால் இந்த ஆண்டு கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கையில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. முக்கியமாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்தாண்டு சுற்றுலாப் பயணிகள் வருகை சீராக இருந்தாலும் கடந்த ஆண்டை விட வருவாயில் இழப்பு ஏற்படுவதாக விடுதி ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் தாத்தா
கிறிஸ்துமஸ் தாத்தா

புத்தாண்டிற்கான கொண்டாட்டத்தையும் தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளதால் இந்தாண்டு குளிர்காலத்தை அனுபவிக்க சுற்றுலாப்பயணிகளின் வருகை குறையும் என விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கிறிஸ்தவமும் தமிழ்நாடும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.