திண்டுக்கல்: பழனியை சேர்ந்த சத்தியன் என்பவர் தனது வீட்டில் செப்பேடு ஒன்றை பாதுகாத்து வந்தார். அதை தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி ஆய்வு செய்தார். பின்னர் இந்த செப்பேடு குறித்து அவர் கூறியதாவது,’’இந்த செப்பேடு 16-ம் நூற்றாண்டை சேர்ந்தது. விஜயநகர மன்னர் 2-ம் வெங்கட்டநாயக்கரின் ஆட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செப்பேடு 28 சென்டிமீட்டர் நீளமும், 17 சென்டிமீட்டர் அகலமும் கொண்டது. இதில் 91 வரிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் சேவலும், மயிலும், பாம்பு கொண்டது போன்ற முருகப்பெருமானின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. செப்பேட்டில், முருகப்பெருமானின் சிறப்புகளும், விஜயநகர மன்னர் மல்லிகார்சுனராயர் தொடங்கி வெங்கட்டநாயக்கர் வரையிலான மன்னர்களை புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.
மேலும் சாலி மூல மார்க்கண்டடேய கோத்திர பண்டாரங்களின் சிறப்புகளும் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக பண்டாரங்கள் இரண்டு சொல் உரையாதவர்கள், செங்கோல் புரிந்து வாழ்பவர்கள், கரிகால சோழனின் பிரியத்துக்கு உரியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமுதா மிஸ்தான் வேணும்.. சாலை மறியல் செய்த மாணவிகள்..