திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் வனப்பகுதிக்கு முறையான அனுமதியின்றி நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்டோர் சென்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து வனப்பகுதிக்குள் அனுமதியின்றி சென்ற நடிகர்கள் விமல், சூரி உள்பட நான்கு பேருக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர்கள் தடையை மீற, ஏரிக்குச் செல்ல உதவிய மூன்று தற்காலிக வனப்பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் நடிகர்கள் எவ்வாறு கொடைக்கானல் பகுதிக்கு வந்தனர். அவர்களுக்கு இ பாஸ் வழங்கப்பட்டதா அல்லது அதிலும் ஏதும் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று( ஜூலை 28) கொடைக்கானல் காவல்துறையினர் நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் மீது ஊரடங்கு உத்தரவை மீறியது, கரோனா பெருந்தொற்று பரவக் காரணமாக இருந்தது என 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
நடிகர்கள் விமல் - சூரி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
திண்டுக்கல்: அனுமதியின்றி வனப்பகுதிக்கு சென்ற நடிகர்கள் விமல், சூரி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.