நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய அவசர தேவைகளுக்கு மட்டுமே பிற மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொடைக்கானல் நாய்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் நாசர் என்பவர் கேரள மாநிலத்தில் தனது குடும்பத்தாருடன் தங்கியிருந்துள்ளார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்தச் சூழலில் எந்தவித அனுமதியும் பெறாமல் கொடைக்கானலுக்கு வந்த அவர், நாய்ஸ் ரோடு பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார் .
வெளியூரிலிருந்து வந்திருந்த அப்துல் நாசர் குடும்பத்தினரைப் பப்றி அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பெயரில் விசாரணை செய்த சுகாதாரத் துறையினர், கேரளாவிலிருந்து வந்த மூவரையும் தனிமைப்படுத்தியதுடன் அவர்களது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
அத்துடன் சட்ட விதிமுறைகளை மீறி வைரஸ் பரவும் நோக்கத்துடன் செயல்பட்டதாக அவர்கள் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கொடைக்கானல் காவல் துறையினர் இவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். மேலும், மூவரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறதா என்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் பார்க்க: குறையும் கச்சா எண்ணெய் விலை - அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை!