ETV Bharat / state

Viral Video: தீப்பற்றி எரிந்த கார்: நள்ளிரவில் பரபரப்பு

திண்டுக்கல் அருகே தேசிய நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஏசி கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

car caught fire
தீப்பற்றி எரிந்த கார்
author img

By

Published : Feb 27, 2022, 2:22 PM IST

திண்டுக்கல்: செம்பட்டியைச் சேர்ந்தவர்கள் கதிரேசன் மற்றும் கணேசன். கணேசன் கோயம்புத்தூரில் பணிபுரிந்து வருகிறார். இன்று (பிப். 27) வேலை நிமித்தமாக கணேசனும் கதிரேசனும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவில் வடமதுரை அருகே வந்தபோது திடீரென காரின் முன்பக்க பகுதியில் புகை வந்துள்ளது. இதனையடுத்து திண்டுக்கல் - திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் சாலையோரம் காரை நிறுத்தி பார்த்தபோது, கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதைக்கண்ட இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார். சிறியதாக பற்றிய தீ மளமளவென கார் முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது.

தீப்பற்றி எரிந்த கார்

வேடசந்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கு முன்னதாகவே கார் முழுவதும் எரிந்து சாம்பலாகியது.

காரில் இருந்து புகை வருவதை அறிந்து கொண்ட கதிரேசன் சாலையின் ஓரமாக காரை நிறுத்தியதால் காரில் பயணித்த இருவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து வடமதுரை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Watch Video: பட்டப்பகலில் கார் திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.