சென்னை: நடிகை த்ரிஷா சூர்யா 45, 96 இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். பிரபல நடிகை த்ரிஷா 1999ஆம் ஆண்டு வெளியான ’ஜோடி’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ’மௌனம் பேசியதே’ திரைப்படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்தார். பின்னர் சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, திருப்பாச்சி, ஆறு, சம்திங் சம்திங், கிரீடம், பீமா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக உச்ச நடிகையாக வலம் வரும் த்ரிஷா ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பிரபல நடிகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா, 96, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் த்ரிஷா நடிப்பு பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. ஜெஸ்ஸி, குந்தவை ஆகிய கதாபாத்திரங்களின் மூலம் இன்று வரை ரசிகர்களின் மனதில் கனவுக் கன்னியாக இடம் பெற்றுள்ளார்.
There will be a sequel to the popular romantic film 96
— Sreedhar Pillai (@sri50) November 27, 2024
YES #96Part2 is happening with director #PremKumar, #VijaySethupathi, #Trisha and #GovindVasantha reunion and produced by Dawn Pictures❤️ pic.twitter.com/lbstJnT3oe
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைஃப்' படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தற்போது 96 இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாகவும், அந்த படத்திலும் த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரேம்குமார் இயக்கும் 96 இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் அந்த படத்தை dawn pictures சார்பில் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சூர்யா 45' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி திரைப்படங்கள், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா' திரைப்படம், மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ராம்’, டொவினோ தாம்ஸ் நடிக்கும் 'Identity' என த்ரிஷா நடிக்கும் படங்கள் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.
இதையும் படிங்க: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு!
நடிகை த்ரிஷா சினிமாவில் காலடி வைத்து கிட்டதட்ட 25 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், தற்போதும் தென்னிந்திய சினிமாவில் அனைத்து மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். கடைசியாக கோட் படத்தில் த்ரிஷா நடனமாடிய 'மட்ட' பாடல் மாபெரும் மெகா ஹிட்டானது. இந்நிலையில் 96 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், த்ரிஷா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்