ETV Bharat / entertainment

ஃபெங்கல் புயல் எதிரொலி: சித்தார்த் நடித்துள்ள ‘மிஸ் யூ’ திரைப்பட ரிலீஸ் ஒத்திவைப்பு! - MISS YOU RELEASE POSTPONED

Miss you movie release postponed: ஃபெங்கால் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், சித்தார்த் நடித்துள்ள ‘மிஸ் யூ’ திரைப்பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

‘மிஸ் யூ’ திரைப்பட போஸ்டர்
‘மிஸ் யூ’ திரைப்பட போஸ்டர் (Credits - Film posters)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 28, 2024, 11:59 AM IST

Updated : Nov 28, 2024, 1:29 PM IST

சென்னை: நடிகர் சித்தார்த் நடித்துள்ள ’மிஸ் யூ’ (Miss You) திரைப்படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர் சித்தார்த் 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் ஆயுத எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவியத் தலைவன், தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பெயர் பெற்றுள்ளார்.

அருண்குமார் நடிப்பில் சித்தார்த் கதாநாயகனாக நடித்த ’சித்தா’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் சித்தார்த் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இதனிடையே சித்தார்த் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

இதனையடுத்து ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த், ஆஷிகா ரங்காநாத் கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்த ‘மிஸ் யூ’ திரைப்படம் நாளை (நவ.29) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஜிப்ரான் இசையமைத்துள்ள மிஸ் யூ படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

இதையும் படிங்க: சூர்யா 45, 96 பாகம் 2 என நீளும் திரைப்படங்கள்... 25 ஆண்டுகள் ஆகியும் மார்க்கெட் உச்சத்தில் நடிகை த்ரிஷா!

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஃபெங்கால் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ‘மிஸ் யூ’ திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து மிஸ் யூ படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மிஸ் யூ திரைப்பட வெளியீடு கனமழை காரணமாக மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். நாளை ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'சொர்க்கவாசல்' திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Nov 28, 2024, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.