ETV Bharat / state

நெஞ்சை உலுக்கிய கொடைக்கானல் சம்பவம் - வீடியோ வெளியிட்ட நபர் கைது

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பெண் தீக்குளித்து இறந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பரப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

arrest
arrest
author img

By

Published : Sep 2, 2020, 1:24 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கேசி பட்டியில் 32 வயதான மாலதியும், சதீஸ் (26) என்பவரும் ஐந்து வருடங்களாக கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், சதீஸ் தனது பெற்றோர் பார்த்த வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாலதி, சதீஸின் தந்தை நடத்தி வரும் டீ கடை முன்பு சனிக்கிழமை (ஆக.29) பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மாலதி மரணத்திற்கு காரணமான காதலன் சதீஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாலதி தீக்குளிக்கும் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிய சரவணக்குமார் (30) மீது வழக்குப் பதிவு செய்த தண்டிக்குடி காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட சரவணகுமார் சதீஷின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மருத்துவர் கனவில் இருந்த மாணவி நீட் தேர்வால் தற்கொலையா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.