ETV Bharat / state

வழக்கறிஞர் வீட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளை - நகை கொள்ளை

திண்டுக்கல்: வழக்கறிஞரின் வீட்டை உடைத்து 40 சவரன் நகைகள்,  பத்தாயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் வீட்டில் கொள்ளை
வழக்கறிஞர் வீட்டில் கொள்ளை
author img

By

Published : Sep 22, 2020, 7:36 AM IST

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடுத்துள்ள சென்னமநாயக்கன்பட்டி ஏழுமலையான் நகர்ப் பகுதியில் குடியிருந்து வருபவர், வழக்கறிஞர் ரஃபிக் அகமது.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நத்தம் அருகேயுள்ள வத்திப்பட்டியில் உள்ள உறவினர் விபத்தில் காயமடைந்திருந்ததை நேரில் பார்த்து நலம் விசாரிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக உறவினர் இறந்துவிட்டதால், அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட பின் நேற்று (செப்டம்பர் 21) இரவு சுமார் 9 மணியளவில் அவரது வீட்டிற்குத் திரும்பினார்.‌ அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

மேலும் உள்ளே சென்று பார்த்தபோது அவரது வீட்டின் உள்ளே இருந்த இரண்டு பீரோக்களும் உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் நகைகள், பத்தாயிரம் ரூபாய் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தாடிக்கொம்பு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் புறநகர் துணை காவல் கண்காணிப்பாளர் வினோத், திண்டுக்கல் தாலுகா காவல் ஆய்வாளர் தெய்வம் ஆகியோர் வீட்டினை ஆய்வு செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.