ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளின் உறவினர்களிடம் லஞ்சம் பெறும் பணியாளர்கள் - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் : பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படும் கர்ப்பிணிகளின் உறவினர்களிடம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரையடுத்து அது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

bribe for delivery in government hospital

author img

By

Published : Aug 18, 2020, 3:02 AM IST

திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைப் பெறுகின்றனர். அதேபோல் மகப்பேறு சிகிச்சைக்காக திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் 200க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகளின் உறவினர்களிடம் குழந்தைக்கு ஏற்ப 2000 முதல் 3000 வரை மகப்பேறு கட்டடத்தில் பணி செய்யும் பணியாளர்கள் லஞ்சம் வாங்குவதாக பாதிக்கப்பட்ட நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரிடம் பணம் கேட்டது யார் என விசாரித்து அறிக்கையை மாவட்ட ஆட்சியர், இணை இயக்குநரிடம் சமர்பிக்கப்பட உள்ளது. தொடர்ந்து அவர்கள் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.