ETV Bharat / state

பழனி நூற்பாலையில் பாய்லர் வெடித்து பெரும் விபத்து.. - palani news

பழனி அருகே தனியார் நூற்பாலையில் பாய்லர் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது.

பழனி நூற்பாலையில் பாய்லர் வெடித்து பெரும் விபத்து..

author img

By

Published : Nov 28, 2022, 10:24 AM IST

திண்டுக்கல்: பழனியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திண்டுக்கல், திருப்பூர் மாவட்ட எல்லையான சாமிநாதபுரத்தில் தனியார் பேப்பர் மில் மற்றும் நூற்பாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் ஒரு பிரிவாக நூல்களுக்கு சாயம் ஏற்றும் ஆலை செயல்பட்டு வருகிறது.

இன்று (நவ 28) காலை 7 மணியளவில் பாய்லர் வைக்கப்பட்டிருந்த ஆயிலில் தீ பிடிக்கத் தொடங்கி உள்ளது. இதனைப்பார்த்த பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றுள்ளனர்.

தனியார் நூற்பாலையில் பாய்லர் வெடித்ததில் ஏற்பட்ட பெரும் தீயை தீயணைப்புத் துறையினர் அணைத்து வருகின்றனர்

ஆனால் தீயை அணைக்க முடியாது என தெரிந்தவுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியில் இருந்த பணியாளர்கள் அனைவரும் விரைவாக வெளியேறினர். தொடர்ந்து‌ மற்ற பணியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து ஆதீ, வேகமாக மளமளவென பரவி அருகிலுள்ள பாய்லரில் தீப்பிடித்தது. தொடர்ந்து சில நிமிடங்களில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்தது. பின்னர் தகவல் அறிந்து அங்கு சென்ற பழனி தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து... 13 பேர் காயம்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.