திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கியச் சுற்றுலாத் தலமாக இருந்துவருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் நகர்ப் பகுதி மட்டுமின்றி பல்வேறு இடங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துவருகிறது.
முக்கியச் சுற்றுலாத் தலமான மோயர் பாய்ன்ட் பகுதியில், கடந்த சில நாள்களாக யானைக் கூட்டம் பேரிஜம் வனப்பகுதியிலிருந்து வெளியேறி மோயர் பாய்ன்ட் சுற்றுலாத் தலத்தில் உள்ள சிறு வியாபாரிகளின் நான்கு கடைகளை இடித்துச் சேதப்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று யானைக் கூட்டத்தைக் கண்காணித்துவருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் யானைக் கூட்டம் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுள்ளதா என உறுதிசெய்த பின்னரே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், அதுவரை அனைத்துச் சுற்றுலாத் தலங்களையும் மூட மாவட்ட வன அலுவலர் திலீப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.