ETV Bharat / state

நத்தம் மலைக் கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

நத்தம் மலைக் கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்புடன் குதிரைகளில் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

author img

By

Published : Apr 5, 2021, 3:51 PM IST

குதிரை மீது ஏற்றி வாக்கு பெட்டிகள்
natham malaiyur hills

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் 402 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் எல்லை பாறை என்ற கிராமம் மலை அடிவாரத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும், லிங்கவாடி& மலையூர் ஆகியவை மலை உச்சியிலும் உள்ளன. இங்கு சாலை வசதி செய்து தரப்படவில்லை.

ஆதலால் கரடு, முரடான பாதையைத் தான் அப்பகுதியினர் பயன்படுத்திவருகின்றனர். இந்நிலையில் நாளை (மார்ச் 6) நடைபெறவுள்ள தேர்தலையொட்டி, நேற்று மதியம் (ஏப்.4) குதிரைகள் மூலம் 2 வாக்கு பெட்டிகளும், அத்தோடு பாதுகாப்பு உபகரணங்கள், எழுதுபொருள்கள் அடங்கிய பெட்டிகளும் துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களுடன் 4 தேர்தல் உதவி அலுவலர்களும், காவல் துறையை சேர்ந்த நான்கு பேரும் இருந்தனர்.

மலைக்கிராமங்களுக்கு செல்லும் வாக்கு பெட்டிகள்

வாக்கு சாவடி விவரங்கள்

மலையூரில் ஒரே ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்வாக்காளர் 230 பேரும், பெண் வாக்காளர்கள் 243 பேரும் என மொத்தம் 473 வாக்காளர்களும் உள்ளனர். இதை போலவே நத்தம் குட்டுப்பட்டி அருகில் கரந்தமலை உச்சியில் அடிவாரத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் பெரிய மலையூர், சின்னமலையூர் மற்றும் வலசு ஆகிய 3 இடங்களில் அப்பகுதிக்கு 3 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் பெரிய மலையூரில் ஆண் வாக்காளர்கள் 337 பேர், பெண் வாக்காளர்கள் 309 பேர் என மொத்தம் 646 வாக்காளர்கள் உள்ளனர். சின்ன மலையூரில் ஆண் வாக்காளர்கள் 109 பேர், பெண் வாக்காளர்கள் 113 பேர் என மொத்தம் 222 வாக்காளர்கள் உள்ளனர். வலசையில் ஆண் வாக்காளர்கள் 176 பேர், பெண் வாக்காளர்கள் 178 பேர் என மொத்தம் 354 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்தப் பகுதில் சாலை வசதியில்லாமல் கடந்த தேர்தல்களில் தலைச்சுமையாகவும், குதிரையின் மீது வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. இந்தாண்டு முதல் முறையாக பிக்&அப் வேனில் வைத்து துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்புடன் மலை கிராமங்களுக்கு வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

இதில் 5 காவல் துறை அலுவலர்கள், தேர்தல் உதவி அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள், வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவினர் 3 வாக்குச்சாவடிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமாரன், நத்தம் ஆய்வாளர் ராஜமுரளி உள்பட 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:குமரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.