திண்டுக்கல் - பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முத்தனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் அதே பகுதியில் இனிப்பகம் நடத்தி வருகிறார். இந்த இனிப்பகத்தில் பணிபுரியும் நாகலட்சுமி வழக்கம்போல் கடையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது வெயிலடுச்சாம்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர், இனிப்பகத்தினுள் ஏறி, நாகலட்சுமியை தகாத வார்தைகளால் திட்டியும், கடைகளில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியும் உள்ளார். அந்நேரத்தில் சரவணனின் உறவினர்கள் அவரை சமாதானப் படுத்த முற்பட்டனர். ஆனால் அவர் மிகுந்த கோபத்துடன் நாகலட்சுமியை தாக்க முற்பட்டுள்ளார்.
"மெட்ரோ" படத்தைப் பார்த்து பெண்களிடம் வழிப்பறி - காவல் துறையை அதிர வைத்த சம்பவம்
இது தொடர்பாக கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகராறு சம்பவம் குறித்த கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன்? எதற்காக? சரவணன் நாகலட்சுமியைத் தாக்க வந்தார் என்பது விசாரணையில் தான் தெரியவரும் என்று ரெட்டியார் சத்திரம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.