ETV Bharat / state

தேங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் போராட்டம் - விவசாயிகள் போராட்டம்

அய்யம்பாளையத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து விவசாயிகள் ரோட்டில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
author img

By

Published : May 31, 2022, 2:24 PM IST

திண்டுக்கல்: அய்யம்பாளையம் பகுதியில் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயமே பிரதானமாக உள்ளது. இதில் மாங்காய், கொட்டை முந்திரி உள்ளிட்டவை பயிரிட்டு வருகின்றனர். தென்னை விவசாயிகளுடைய விளை பொருட்களை நிரந்தரப்படுத்த இந்த அரசு முன்வர வேண்டும், இந்தப் பகுதியில் உள்ள தென்னை விவசாயிகள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

கார்ப்பரேட் கம்பெனிகள் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்போடு சன்பிளவர் ஆயில் 70 ரூபாயாக இருந்தது. தேங்காய் எண்ணெய் லிட்டர். 160 ரூபாயாக இருந்தது. ஆனால் திட்டமிட்டு இந்த விவசாயத் தொழிலையும் விவசாயத்தையும் பாதிக்கின்ற வகையில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மாநில அரசு துணை போனதால் மீண்டும் சன் பிளவர் ஆயில் 180 ரூபாய்க்கும், தேங்காய் எண்ணெய் 120 ரூபாய்க்கு விற்கும் அளவிற்கு மோசமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம்

இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்த தேங்காயை குடோன்களில் குவித்து வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 2 லட்சம் முதல் 5 லட்சம் என்றும், கடந்த இரண்டு மாதங்களாக 1 கோடி தேங்காய் தேங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் வியாபாரிகளுக்கு பணம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் அரசியல்வாதிகள் அரசு நிர்ணயித்த விலைக்கு வாங்காமல் குறைந்த விலைக்கு வாங்கி குடோன்களில் பதுக்கி வைக்கின்றனர். ஆனால் வியாபாரிகளிடம் 80 ரூபாய் 70 ரூபாய்க்கு கேட்கிறார்கள்.

இதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தி விவசாயிகளும் சிறு வியாபாரிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய தென்னை விவசாய சங்கம் ஒன்றிணைந்து மாவட்ட மையங்களில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்படும் என்று எச்சரிக்கின்றோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கொப்பரை தேங்காய், பருப்பு ஒரு கிலோ ரூ.140 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், பச்சை தேங்காய் ஒன்றுக்கு ரூ.50 ரூபாய் விலையை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் முன்வைத்தனர். மேலும், அய்யம்பாளையம் பகுதியில் அரசின் நிரந்த தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. முன்னதாக 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலையில் தேங்காய்களை உடைத்து போராட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க: இனி 9,10 ஆம் வகுப்பிற்கு தொழிற்கல்வி பாடம் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.