திண்டுக்கல் மாவட்டம், ஆவின் சார்பில் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 தானியங்கி பால் பரிசோதனைக் கருவிகள், 100 விழுக்காடு மானியத்தில் வழங்கும் நிகழ்ச்சி ஆவின் பால் பண்ணையில் நேற்று நடைபெற்றது.
அப்போது, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 50 பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்களுக்குத் திண்டுக்கல் ஆவின் தலைவர் செல்லச்சாமி தானியங்கி பால் பரிசோதனைக் கருவிகளை வழங்கினார்.
இந்தக் கருவிகளின் மூலம் பாலின் தரத்தை உறுதிபடுத்தி, உற்பத்தியாளர்கள் பயன்பெற வசதியாகப் புதியமுறை அமல்படுத்தப்பட உள்ளது. மேலும், ஆவின் நிறுவனத்தில் பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முகக்கவசம், கிருமிநாசினிகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் ராமநாதன், மேலாளர் உதயநிதி, புளியமரத்துசெட் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் குப்புசாமி, மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் மகுடீஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : நான் இருக்கேன்; இந்தியா - சீனா மத்தியஸ்தத்திற்கு முன்வந்த ட்ரம்ப்