வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேட்சந்தூர் அடுத்த பூத்தாம்பட்டி பகுதியில் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு தனியார் நூற்பாலை பேருந்து சென்று கொண்டிருந்தது. பெட்ரோல் பங்க் பகுதியில் சென்ற போது எதிரே வந்த பயணிகள் ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோவின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், ஓட்டுநர் நாகராஜ் சம்பவ இத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆட்டோவில் பயணித்த சந்தோஷ் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
சம்பவ இடத்தில் இருந்து நூற்பாலை பேருந்து ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில், தகவல் அறிந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிய சந்தோஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நாகராஜின் உடலை மீட்டு விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆட்டோவும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : அமெரிக்காவை மிரட்டும் ஏவுகணை!. வடகொரியா சோதனை