ETV Bharat / state

திடீரென மயக்கமடைந்த கல்லூரி மாணவிகள்... - வேடசந்தூர் அருகே தனியார் வேளாண்மை கல்லூரியில் மாணவ மாணவிகள் திடீர் மயக்கம் ஆர்டிஓ விசாரணை

வேடசந்தூர் அருகே தனியார் வேளாண்மை கல்லூரியில் மாணவ மாணவிகள் திடீர் மயக்கமடைந்தர். இதையடுத்து ஆர்டிஓ அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேடசந்தூர் அருகே தனியார் வேளாண்மை கல்லூரியில் மாணவ மாணவிகள் திடீர் மயக்கம்.. ஆர்டிஓ விசாரணை!

author img

By

Published : Jun 18, 2022, 7:13 AM IST

திண்டுக்கல்: மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் வேளாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கரூர்,சேலம், கோயம்புத்தூர், கடலூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் நித்ய குமார், ஷோபனா, கோகுல் நந்தினி, சுவேதா, சங்கரி,தமிழரசி உள்ளிட்ட 13 மாணவ மாணவிகள் திடீரென மயக்கமடைந்த நிலையல், வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆர்டிஓ சிவக்குமார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

வேடசந்தூர் அருகே தனியார் வேளாண்மை கல்லூரியில் மாணவ மாணவிகள் திடீர் மயக்கம்.. ஆர்டிஓ விசாரணை!

அப்போது மாணவர்கள் கூறுகையில், " காலை 7 மணி அளவில் வகுப்புகள் தொடங்க படுவதாகவும் காலை உணவு ஒன்பது முப்பது மணி அளவில் கொடுக்கப்படுவதால் பசியில் மயங்கி விழுந்ததாகவும் தெரிவித்தனர்

மேலும் இதுகுறித்து ஆர்டிஓ விடம் கேட்டபோது இது சம்பந்தமாக வேடசந்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும், கல்லூரியில் முறையான விசாரணை நடத்தப்பட்டு ஏதேனும் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

உணவு வழங்க தாமதமானதால் மாணவ மாணவிகள் பசியில் மயங்கி விழுந்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு - தீவிரமடையும் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.