ETV Bharat / state

இளைஞர் உடல் தூக்கில் தொங்கியபடி கண்டெடுப்பு! - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: இளைஞர் உடல் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இளைஞர் உடல் மீட்பு
இளைஞர் உடல் மீட்பு
author img

By

Published : Jul 24, 2020, 8:24 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காக்காத்தோப்பு மாசி மல்லம்மாள் கோயில் அருகே 25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் புளிய மரத்தில் பெல்ட்டால் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருந்த இளைஞர் உடலை மீட்டனர். அந்த இளைஞரின் உடலானது தலையில் பலத்த காயங்களுடன் ரத்தம் சொட்டியவாறு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா ஆய்வு மேற்கொண்டார். தற்போது காவல் துறையினர் அந்த இளைஞர் யார்? அடித்துக் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா உள்ளதா? என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.