திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேவுள்ள கே.குரும்பப்பட்டியைச் சேர்ந்தவர திமுக பிரமுகர் போதுமாணிக்கம் (49). இவர் நேற்றிரவு (மே 5) நிலக்கோட்டை நால்ரோடு அருகேவுள்ள ஒரு உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது இவரது வீட்டின் அருகே இருக்கும் உணவகத்தில் நிலக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மாயி என்பவரது மகன் அழகுமுருகன் (27) அதிமுக பிரமுகர் பகவத்சிங் மகன் சிபி சக்கரவர்த்தி (26), ஆகிய இருவரும் உணவருந்திக்கொண்டிருந்தனர். அப்போது போதுமாணிக்கத்தை பார்த்து முறைத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி போதுமாணிக்கம் இருவரிடமும் கேட்டபோது இருவரும் வெளியே வா என்று சொல்லிவிட்டு வெளியே தனது நண்பர் முனியாண்டி என்பவர் மகன் சரண்ராஜை வரவழைத்து காத்துக் கொண்டிருந்தனர். வெளியே வந்த போதுமாணிக்கத்தை மூவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போதுமாணிக்கம் சேர்க்கப்பட்டார்.
பின்னர் நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் தேவதாசனிடம் கொடுத்த புகாரின்படி அழகுமுருகன், சிபிசக்கரவர்த்தி, சரண்ராஜ் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிபிசக்கரவர்த்தியும் அழகுமுருகனையும் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.