திண்டுக்கல்: பீட்சா, ஜிகர்தண்டா, சூது கவ்வும், பேட்ட, இறைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் பாபி சிம்ஹா. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படத்தில் சிறந்த வில்லனுக்காகத் தேசிய விருது வழங்கப்பட்டது.
இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இதில் இவர் வீடு கட்டி வருகின்றார். இந்த பணிகளைக் கொடைக்கானலைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஜமீர், காசிம்முகமது ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தளபதி 68க்கு லீவு விட்ட வெங்கட் பிரபு முதல் வித்தியாசமான முறையில் புரோமோஷன் செய்த விஜய் ஆண்டனி வரை சினிமா சிதறல்கள்!
இதனிடையே பாபி சிம்ஹாவுக்கும் கட்டிட ஒப்பந்ததாரர்களுக்குமிடையே ஒரு சில காரணங்களால் மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமான பணி தாமதமாக நடைபெற்று வந்துள்ளது. இது குறித்து நடிகர் பாபி சிம்ஹா அவர்களிடம் கேட்ட பொழுது கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கட்டட ஒப்பந்ததாரர்கள் இருவரும் நடிகரிடம் கடும் சொற்களைப் பேசியதாகவும், இவர்களுடன் சேர்ந்து கொடைக்கானலைச் சேர்ந்த உசேன், பேத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஆகியோரும் மிரட்டியதாகவும் நடிகர் பாபி சிம்ஹா கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாபி சிம்ஹாவின் புகார் ஏற்றுக் கொண்ட காவல் துறையினர், மீது கொலை மிரட்டல், ஏமாற்றுதல், அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு சென்ற ரஜினிகாந்த்.. பெற்றோர் நினைவிடத்தில் மரியாதை!