ETV Bharat / state

சங்கிலி கருப்பன்சாமிக்கு 16 வகையான அபிஷேகம்: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சிறப்பு வழிபாடு!

author img

By

Published : Aug 3, 2023, 5:28 PM IST

திண்டுக்கல் அருகே ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காவல் தெய்வம் சங்கிலி கருப்பன்சாமிக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்ற நிலையில் திருநங்கைகளுக்கு கிடாய்வெட்டி சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

சங்கிலி கருப்பன்சாமிக்கு 16 வகையான அபிஷேகம்: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சிறப்பு வழிபாடு!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ராமலிங்கப்பட்டி பாதாள செம்பு முருகன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா சிறப்புப் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அந்த வகையில் நள்ளிரவு அங்குள்ள காவல் தெய்வம் சங்கிலி கருப்பன்சாமிக்கு 16 வகையான பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு கிடாய் வெட்டி அன்னதானமும் வழங்கப்பட்டது.

அங்குள்ள 15 அடி உயரம் கொண்ட சங்கிலி கருப்பன் சாமிக்கு சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர், பால், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து 5 ஆயிரம் எலுமிச்சை பழங்களாலும், செவ்வந்தி பூக்களாலும் மாலை அணிவிக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இதையும் படிங்க: SPECIAL - அணைக்காக உயிர்த்தியாகம் செய்த சிறுமி - 1000 ஆண்டுகளாக கொண்டாடப்படும் நல்லம்மாள்!

மேலும், தெய்வங்களுக்கு விபூதி அபிஷேகம் செய்யப்பட்டு அதன் பிறகு பக்தர்களுக்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம். ஆனால், சங்கிலி கருப்பன் சாமிக்கு விபூதி அபிஷேகம் செய்யப்படும். அப்போது பலமாக வீசும் காற்றில் அபிஷேகம் செய்யப்பட்ட விபூதி யார் மீதெல்லாம் விழுகிறதோ அவர்களை சங்கிலி கருப்பன் சாமி ஆசீர்வதித்ததாக நினைப்பார்கள்.

இப்படி பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு நடைபெற்ற ஆடிப்பெருக்கு சங்கிலி கருப்பன் சாமி பூஜை வழிபாட்டு நிகழ்ச்சியில், அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த வழிபாட்டின்போது மேளம் முழங்க, சங்கிலி கருப்பன்போல் வேடமிட்டு நடனமாடிய காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

மேலும், அங்கு வந்திருந்த திருநங்கைகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பச்சை புடவைகளும், பக்தர்களுக்கு பூஜையில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட காசுகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, திருநங்கைகள், குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் மக்கள் பல்வேறு சிறப்பு பூஜை வழிபாடுகளை செய்து வருகின்றனர். இறந்தவர்களுக்கு படையல் படைப்பது, கோயில்களில் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, புதுமணத் தம்பதிகளுக்கான வழிபாடு என பாரம்பரிய கலாசாரத்தோடு கலந்த இந்த ஆடிப்பெருக்கு விழா தமிழ் மக்களின் சிறப்பு பண்டிகைகளில் ஒன்றாகவே உள்ளது. அந்த வகையில் காவல் தெய்வம் சங்கிலி கருப்பனுக்கும் சிறப்பு பூஜை வழிபாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆடிப்பெருக்கு விழா: திருவையாற்றில் புதுமணத் தம்பதிகள் உற்சாக கொண்டாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.