திண்டுக்கல்: குஜராத் மாநிலம் பான கா சிட்டி என்ற பகுதியைச் சேர்ந்த 41 பேர் தனியார் பேருந்து ஒன்றில் கொடைகானலுக்கு சுற்றுலா வந்தனர்.
இந்நிலையில் கடந்த பதினெட்டாம் தேதி குஜராத்திலிருந்து கிளம்பிய பேருந்து மைசூர் ஊட்டி பழனி மற்றும் கொடைக்கானலுக்கு சென்று விட்டு, இன்று(ஆக.23) மதுரை செல்வதற்காக கொடைக்கானலிலிருந்து திரும்பியது.
அப்போது டம் டம் பாறை அருகே பேருந்தில் பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரை உடைத்து பள்ளத்தில் இறங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக மரத்தின் மீது மோதியதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும் பயணம் செய்த 20 ஆண்கள் மற்றும் 22 பெண்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சாலையில் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்து நடந்த பேருந்திலிருந்து அனைவரையும் பேருந்தின் பின்புற கண்ணாடியை உடைத்து காப்பாற்றினார்.
பின்னர் காயங்களுடன் இருந்த பயணிகளை வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன்... குளத்தில் கவிழ்ந்து விபத்து... 20 பேர் படுகாயம்