திண்டுக்கல்: திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே பூனானம்பாளையத்தை சேர்ந்த லாரி ஒட்டுநர் நிவாஸ் (31). இவர் பழனி அருகே கோல்டு வின்னர் கம்பெனியிலிருந்து சரக்குகளை எடுத்துக்கொண்டு, கும்பகோணத்தில் இறக்குவதற்காக வடமதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது.
அப்போது வெள்ளபொம்பன்பட்டி என்ற இடத்தில் வண்டி ஆடுவதைக் கணித்த லாரியின் டிரைவர் வாகனத்தை நிறுத்தி மேலே ஏறிப் பார்த்தபோது, தான் ஏற்றி வந்த கோல்டு வின்னர் ஆயில் பெட்டிகளில் 90க்கும் மேற்பட்ட பெட்டியிலிருந்து (900 லிட்டர் ஆயிலை) போர்த்தி வைக்கப்பட்ட தார்ப்பாயைக் கிழித்து எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.
அதையடுத்து நெடுஞ்சாலையில் பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் எல்லாம் தார்பாய் முருகன் போன்ற மர்ம நபரின் அட்டகாசம் தாங்க முடியாமல் வேறு பாதையில் செல்கின்றனர். காரணம் லாரி செல்லுகின்ற போது சத்தமின்றி அதன் பின்னால் ஏறி அதிலிருந்து சரக்குகளையெல்லாம் திருடிவிடும் ஆற்றல் கொண்டவன். அதேபோல் வேடசந்தூர் பகுதிகளிலும் தார்ப்பாய் முருகன் போல் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் உலா வருகிறார்கள் என்று சமூக ஆர்வலர் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருச்சி மணப்பாறை, விராலிமலை என்று பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் தார்ப்பாயை கிழித்து பொருள்கள் திருடு போவதாகவும் குற்றவாளிகளை போலீசார் பிடிக்க முடியாமல் திணறி வருவதாகவும் கூறுகின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்தால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் நிம்மதியுடன் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்று கூறுகின்றனர்.
இதையும் படிங்க:மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூடு