தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 90.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மாதம் மார்ச் 1ம் தேதி துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 19ம் தேதி நிறைவடைந்தது. இதில் திண்டுக்கல் முழுவதிலுமிருந்து 10,491 மாணவர்கள் 11,677 மாணவிகள் என மொத்தம் 22,071 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
திண்டுக்கல் மாவட்டத்திலும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். 9296 மாணவர்கள், 10743 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தங்களது மதிப்பெண் விவரத்தை தெரிந்து கொள்ள மாணவர்கள் கைப்பேசிக்கு குறுந்தகவல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.