ETV Bharat / state

8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர்! - 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர்

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.

python
python
author img

By

Published : Nov 29, 2019, 11:27 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விவசாயி சிவமுருகன் என்பவருக்குச் சொந்தமான வாழைத் தோட்டம் ஒன்று உள்ளது. சிவமுருகன் தோப்பை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது வாழைத்தோப்பு வரப்பின் கரையில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக வத்தலகுண்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 8 அடி நீள மலைப் பாம்பை லாவகமாகப் பிடித்து அதனை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர்

பின்பு அந்த மலைப்பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

இதையும் படிங்க: நுரைப் பஞ்சுகளாய் காட்சியளிக்கும் பட்டினப்பாக்கம் கடற்கரை!

Intro:திண்டுக்கல் 29.11.19

வாழைத் தோட்டத்தில் 8 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.

Body:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ராமநாயக்கன் பட்டி கிராமம் அமைந்துள்ளது. வைகை ஆற்றின் கரையோரத்தில் இக்கிராமம் இருப்பதனால் வாழை, தென்னை சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவமுருகன் இன்று தனது வாழைத் தோப்புக்கு சென்றுள்ளார். தோப்பை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது வாழைத்தோப்பு வரப்பின் கரையில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சிவமுருகன் கொடுத்த தகவலின் பேரில் வந்த வத்தலக்குண்டு தீயணைப்புத் துறையினர் மலைப் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தரையில் தவழ்ந்து கொண்டிருந்த மலைப்பாம்பு பொதுமக்களை கண்டதும் மரத்தின் மீது ஏறத் தொடங்கியது. மரத்தில் இருந்த 8 அடி நீள மலைப் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்புத் துறையினர் அதனை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்பு அந்த மலைப்பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. வைகையாற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் மலைப்பாம்பு ஆற்று நீரில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கி இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.